நாஞ்சில் நாதம் கடந்து வந்த பாதை
...
முத்தமிழும் முழக்கமிடும் குமரி மண்ணில் கோட்டாறு மறைமாவட்டத்திற்கு உட்பட்ட மக்களிடையே மண்டிக்கிடக்கும் கலைத் திறமைகளை உலகிற்குக் கொண்டுவர “கலைவழி இறைமொழி” என்ற விருதுவாக்கோடு, 1970-ம் ஆண்டு அப்போதைய பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளராகிய அருட்பணி. எம். ஜே. எட்வின் அவர்களால் பங்குகள் மற்றும் கல்லூரிகளில் எழுத்துப்பட்டறைகளும், கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து அருட்பணி. வல்தாரிசு இப்பணியை ஏற்றெடுத்து, வானொலிக்கு நிகழ்ச்சிகள் உருவாக்குவதுப்பற்றிய பயிற்சிகளை வழங்கினார்கள். நாளடைவில் மறைமாவட்டத்தின் வளர்ச்சிக்குச் சமூகத்தொடர்புப் பணியின் சேவை தேவை என்பதை உணர்ந்து இப்பணியை மறைமாவட்ட சமூகத்தொடர்பு பணிக்குழுவாக ஆயரால் அறிமுகம் செய்யப்பட்டு, பணிக்குழுவிற்காக செயலர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். அவர்களின் விவரம் பின்வருமாறு.
Fr Edwin M.
J - 1974
Fr
Valdaris - 1976
Fr
Sebastin - 1980
Fr
George Vincent - 1981-1986
Fr
Amal Raj
Nevis - 1986-1989
Fr
Maria Alphonse
Fr
Ma. Pa Jesudas 1990-1991
Fr
John Thamasque
Fr
Ma. Pa
Jesudas - 1991-1993
Fr
Albin
Roby - 1993-1997
Fr Joseph
Justus - 1997-2001
Fr
Joseph
Jeyaseelan - 2001-2003
Fr
Joseph
Justus - 2003-2005
Fr
John
Rufus - 2005-2010
Fr
Devadhas - 2010-2013
Fr
Nithya
Sahayam - 2013-2018
Fr
Selvan
M - 2018-2021
Fr
Southern
Star - 2021-2022
Fr
Arul Eugene
Raj - 2022-2023
Fr
Gnana
Dhas - 2023-
ஒவ்வொரு மறைமாவட்ட சமூகத்தொடர்புப்பணிக்குழுவின் செயலர் மற்றும் நாஞ்சில் நாதத்தின் இயக்குநர்களின் காலத்திலும் பல்வேறு சமூகத்தொடர்பு பணிகளும் வளர்ச்சி பணிகளும் நடைபெற்றுள்ளன. சமூகத்தொடர்பு மையம் மற்றும் டிஜிட்டல் ஒலிப்பதிவு கூடம் நிறுவுதல், ரேடியோ வேரித்தாசுக்கு நிகழ்ச்சிகள் வழங்குதல், ஒலிநாடாக்கள் வெளியிடுதல், இசைக்குழு மற்றும் நடன, நாடக குழு உருவாக்கி இசைக்கச்சேரிகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் பங்குகளில் நடத்துதல், பிற கலைக்குழுக்களை ஒருங்கிணைத்தல், பங்குகளில் கலைக்குழுக்கள் ஆரம்பித்து பயிற்சி வழங்குதல், வார இறுதி நாள்களில் இசை வகுப்புகள் நடத்துதல், வீடியோ துறையை நவீனப்படுத்துதல், நாட்டிய, நாடக நிகழ்ச்சிகளை உருவாக்கி மேடையில் அரங்கேற்றுதல், ஒளி நாடாக்கள் உருவாக்குதல், கோடைக்கால நாட்டியம், இசை வகுப்புகள், ஓராண்டுச் சான்றிதழ் வகுப்புகள் நடத்துதல், சிறுவர்களால் உருவான இளைய நிலா இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்துதல், நாஞ்சில் நாதம் கேபிள் தொலைக்காட்சி தொடங்கி நடத்துதல், படப்பிடிப்பு அரங்கு அமைத்தல், பள்ளிகளில் சென்று நடன வகுப்புகள் மற்றும் இசை வகுப்புகள் நடத்துதல், ஒலி மற்றும் ஒளி நாடாக்கள் வெளியிடுதல், நாஞ்சில் நாதம் தொலைக்காட்சிக்காகவும், மாதா தொலைக்காட்சிக்காகவும் நிகழ்ச்சிகள் தயாரித்தல் போன்ற பல்வேறு பணிகள் பல்வேறு காலகட்டத்தில், பல்வேறு இயக்குநர்களால் நடத்தப்பட்டு, இன்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒத்துழைப்பு வழங்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
